சர்வதேச ஆதரவு இருந்தும் வீழ்ச்சியின் விளிம்பில் பாகிஸ்தான் பொருளாதாரம்
சவுதி அரேபியா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இருந்தும், நிதி பற்றாக்குறையால் பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஸ்திரமின்மை, மோசமடைந்துவரும் வணிகச் சூழல் மற்றும் பொருளாதாரத்தின் தவறான மேலாண்மை ஆகியவை நாட்டை பொருளாதார அபாயங்களுக்கும், அரசியல் நிச்சயமற்ற நிலைக்கும் தள்ளியுள்ளதாக ஏசியன் லைட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாக மீள்வதற்கான நம்பிக்கையை குறைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments