தடைசெய்யப்பட்ட 5 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு..!
மத்திய, மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை தருமபுரி மீன்வளத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
உள்ளூர் மீன்களை அழித்துவிடும் இவ்வகை மீன்களை உண்பதால் கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் வருவதாக எச்சரிக்கை விடுத்தும், 32 இடங்களில் குட்டை அமைத்து வளர்க்கப்பட்ட மீன்களுக்கு கோழிக்கழிவுகள் உணவாக அளிக்கப்பட்டதால் குட்டைகளில் துர்நாற்றம் வீசியது.
இதன் அடிப்படையில் மதிகோண்பாளையத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் 3 குட்டைகளில் இருந்த நீரை வெளியேற்றி 5 டன் மீன்களை மண்போட்டு மூடி அழித்தனர்.
Comments