செல்போன் வெடித்து 8 மாத பெண் குழந்தை கருகி பலியான சோகம்..! படுக்கையில் வேண்டாம் மக்களே..!

0 7619
செல்போன் வெடித்து 8 மாத பெண் குழந்தை கருகி பலியான சோகம்..! படுக்கையில் வேண்டாம் மக்களே..!

படுக்கையில் வைத்து செல்போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்கிய போது செல்போன் வெடித்ததால் 8 மாத பெண் குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆறாம் விரலாய் பேனா கேட்ட காலம் போய்... மொத்த விரலும் செல்போனால் வீணாபோன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..! என்று நொந்து கொள்ளும் அளவுக்கு அத்தியாவசியம் தவிர்த்து அனைத்து இடங்களுக்கும் செல்போனும் கையுமாக அலைந்து திரிபவர்கள் நம்மில் பலர் உண்டு..!

அந்த அளவிற்கு செல்போன்களின் பயன்பாடுகள் அவரவர் தேவைக்கேற்ப நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது 3 முறை செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் நிலை ஏற்படுகின்றது.

சிலர் கையோடு பவர் பேங்கை எடுத்துச்சென்றாலும், பலர் இரவு நேரத்தில் செல்போனை படுக்கையில் வைத்து சார்ஜரில் சொறுகி விட்டு தூங்க செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் அதிக நேரம் சார்ஜ் ஏற்றப்பட்ட செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண்குழந்தை பரிதாபமாக பலியாகி உள்ளது.

அங்குள்ள பச்சுமி கிராமத்தை சேர்ந்த சுனில்குமார் காஷ்யப் - குசும் காஷ்யப் தம்பதியருக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.

சம்பவத்தன்று அந்த குழந்தை கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சூரிய ஒளி மின்சாரம் இணைப்பில் மூலம் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிய சுனில், செல்போனை குழந்தை தூங்கிய கட்டிலில் வைத்திருந்தார். அப்படியே சார்ஜ் ஏறிக் கொண்டிருந்தது

எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று பலத்த சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறி படுக்கையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், இதில் 30 சதவீத தீக்காயம் அடைந்த அந்த பச்சிளம் பெண் குழந்தை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டது, அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் கவனக்குறைவு ஒரு உயிரை காவு வாங்கி உள்ளதாக சுட்டிக்காட்டும் மின்னியல் நிபுணர்கள் எக்காரணத்தை கொண்டும் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டு விட்டு தூங்கச்செல்லகூடாது என்றும் செல்போன்களில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே சார்ஜ் ஏற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

செல்போன் பேட்டரி 100 சதவீதம் இலக்கை எட்டியும் சர்ஜரிலேயே சொறுகப்பட்டிருந்தால் மின்சாரம் வீணாவதோடு செல்போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரியால் எதிர்பாராத ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.

பேட்டரி உப்பிய நிலையில் காணப்பட்டாலோ, அல்லது விரைவாக செல்போன் பவர் இழந்தாலோ அந்த செல்போனை பழுது பார்ப்பது அல்லது உடனடியாக மாற்றுவது அவசியம் என்று மின்னியல் நுபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments