தெலுங்கானாவில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதிஒதுக்கீடு..!

0 3698
தெலுங்கானாவில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதிஒதுக்கீடு..!

தெலுங்கானா மாநிலம் மெஹபூப்நகரில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை பாதுகாக்க 2 கோடி ரூபாய் செலவில் புத்துயிர் அளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பில்லாலமாரி என்று அழைக்கப்படும் இந்த பிரமாண்ட ஆலமரம் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஆலமரமாகும். சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலமரத்தின் விழுதில் 2017 இல் கரையான் தாக்குதல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த மரத்திற்கு பூச்சிகொல்லி மருந்து, உப்பு கரைசல் தண்ணீர் தெளிக்கப்பட்டு அதனை பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த அதிசய ஆலமரத்தை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments