அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு விசாரணை நிலை குறித்த அறிக்கை செப்.19ல் தாக்கல் - சி.பி.சி.ஐ.டி

0 2794
அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு விசாரணை நிலை குறித்த அறிக்கை செப்.19ல் தாக்கல் - சி.பி.சி.ஐ.டி

அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்த வழக்கில் சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நிலை குறித்து செப்டம்பர் 19ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ல் அக்கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டதாக அளித்த புகார் குறித்த வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை எனக்கூறி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதன் விசாரணையில், வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments