சாக்லேட் பை சாப்பிட்டுக் கொண்டே பெண் ஸ்கை டைவிங்.. ஏற்கனவே இது போன்று பீட்சா, பர்கர் சாப்பிட்டதாக தகவல்..!
அமெரிக்காவில், சாக்லேட் பை சாப்பிட்டுக் கொண்டே பெண் ஒருவர் ஸ்கை டைவிங் செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ஸ்கை டைவிங் வீராங்கனையான மெக்கென்னா என்ற அந்த பெண், தான் ஸ்கை டைவிங் செய்த போது பையில் இருந்து ஒரு பெரிய சாக்லேட் பை-ஐ எடுத்து அதனை ரசித்து ருசித்து சாப்பிட்டதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மெக்கன்னா ஸ்கை டைவிங் செய்யும் போது உணவு சாப்பிடுவது இது முதல் முறையல்ல என்றும் அவர் ஏற்கனவே இதே போன்று பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
Comments