கே.எப்.சியில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பர்கரில் கையுறை துண்டு இருந்ததாக புகார்!

0 2780

புதுச்சேரியில் கே.எப்.சி உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பர்கரில் கையுறையின் ஒரு பகுதி இருந்ததாக உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தை சேர்ந்த டேவிட், நண்பருடன் புதுச்சேரியில் உள்ள கேஎஃப்சி சிக்கன் உணவகத்திற்கு சென்று பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அப்போது அதில், பிளாஸ்டிக் கை உறையின் துண்டு  தென்பட்டதாக ஊழியர்களிடம் கேட்டபோது, மன்னிப்பு கேட்ட ஊழியர்கள் வேறு பர்கர் தருவதாக கூறியுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த டேவிட், இதுகுறித்து விழுப்புரம் உணவு பாதுகாப்புத்துறையில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments