ப்ரீபயர் ரக்கட் பாய்ஸ் செய்த காதல் சேட்டை.. கோர்ட்டு வைத்த குட்டு..! ஆபீசர்ஸ் அலர்ட் ஆக்க்ஷன்

0 3431

ப்ரீ பையர்  விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில்,  இளம் தலைமுறையினர் அதனை விளையாடுவது எப்படி?காவல்துறையினரும், சைபர் கிரைமினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ள மதுரைக்கிளை நீதிபதிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் இதழ், வில்சன் கல்லூரி முதலாம் ஆண்டு ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை.

இது தொடர்பாக விசாரித்த போது, எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ பையர் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.

வளரிளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவே எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, "ப்ரீ பையர் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறையினர் அதனை விளையாடுவது எப்படி? காவல்துறையினரும், சைபர் கிரைம் போலீசாரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இல்லையெனில் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டு, இது தொடர்பாக விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments