மேற்கு வங்க அரசின் ஊழல்களை கண்டித்து பாஜக சார்பில் கண்டன பேரணி.. ரயில் நிலையங்களில் பாஜகவினரை தடுத்து நிறுத்தும் போலீசார்!

0 2570

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஊழல்களை கண்டித்து பாஜக சார்பில் இன்று தலைமைசெயலகம் நோக்கி செல்லும் கண்டன பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்துக்கொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்படாததால், ரெயில் நிலையங்களில் பாஜக தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராணிகஞ்ச் ரெயில்  நிலையத்திற்கு எதிரே பாஜக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments