திண்பண்டம் என நினைத்து எலி மருந்து கேக்கை சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!

0 3843

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் தவறுதலாக எலி மருந்து கேக்கை திண்பண்டம் என்று நினைத்து  எடுத்து சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

வரிச்சிக்குடியை சேர்ந்த ராஜா- ஸ்டெல்லா மேரி தம்பதியரின் மூத்த மகளான  சலேத் நிதிக்ஷனா என்பவர் அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். தசை சுருக்க நோயால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று வீட்டின் ஜன்னலில் எலிக்கு வைக்கப்பட்டிருந்த கேக் துண்டை தவறுதலாக எடுத்து சாப்பிட்டுள்ளார்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சலேத் நிதிக்ஷனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments