எஸ்.பி.வேலுமணி - சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் 500 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 26 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 8 லட்சம் தெருவிளக்குகள் எல் இ டி விளக்குகளாக மாற்றப்படுவதற்கு 2015ஆம் ஆண்டு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்பின்னர் 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள சோடியம் பல்புகள் ஆகியவற்றை நீக்கிவிட்டு எல்இடி பல்புகளாக மாற்றுவதற்காக 875 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது
இந்தத் திட்டத்துக்கு மின் விளக்குகளை வழங்கியவர்கள் மின்சார துறையில் எந்தவித முன் அனுபவம் இல்லாதவர்கள் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த டெண்டரை எடுத்துவர்களுக்கு எந்த விதமான அலுவலகமும் பெயரும் கூட இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஊத்துக்கோட்டையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில், முழு வசதிகளுடன் 300 படுக்கையுடன் மருத்துவ கல்லூரி இயங்கி வருவதாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் தரச் சான்றிதழ் வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்தி மருத்துவமனை இயங்கிக் கொண்டிருப்பதாக தவறான சான்றிதழ்களை பெற்றதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments