ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டில் இரவு உணவு அருந்தினார் அரவிந்த் கெஜ்ரிவால்.!

0 3520

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் இரவு உணவு அருந்தினார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அகமதாபாத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, விக்ரம் தண்டானி என்ற ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு இரவு உணவு அருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால், இரவு 7 மணியளவில் ஹோட்டலில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டார்.

பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், ஒரு வழியாக அவர் காட்லோடியா பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments