கால்வாயை ஆக்கிரமித்து கோடிகளைக்கொட்டி கட்டிய வில்லாக்களே வில்லனானது..! பெங்களூருவில் ஒரு க(ர)ன மழைக்காலம்..!

0 3428
கால்வாயை ஆக்கிரமித்து கோடிகளைக்கொட்டி கட்டிய வில்லாக்களே வில்லனானது..! பெங்களூருவில் ஒரு க(ர)ன மழைக்காலம்..!

கால்வாயை ஆக்கிரமித்து சொகுசு வில்லாக்கள் கட்டியதற்கான பலனை பெங்களூரு ரெயின்போ டிரைவ் லேஅவுட் வில்லா வாசிகள் அனுபவித்து வருகின்றனர். நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் என்ன நிகழும் என்பதற்கு சாட்சியாய் மாறிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னையை 2015ஆம் ஆண்டு புரட்டி போட்ட பெருமழை வெள்ளத்திற்கு பின்னரும் இன்றுவரை பல இடங்களில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், மழை நீர் கால்வாய் பணிகளை மேற்கொள்வதிலும் வேகம் குறைவாகவே காணப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நீர் நிலை ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாததால் பெங்களூரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. பல ஐ.டி நிறுவனங்களில் இன்னும் மழை நீர் வடியவில்லை, தரை மட்ட கார் பார்க்கிங்கில் ஏராளமான கார்கள் நீரில்மூழ்கி காணப்படுகின்றது. வெள்ளத்தை வடியவைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கால்வாய் அக்கிரமிப்பால் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.

குறுகலான பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இருந்து பரிசல்கள் மூலம் வெளியே சென்று தங்கள் அத்தியாசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்...

வெள்ள நீர் சாலையில் வடியாமல் தேங்கி நிற்பதால், ஆடியிலும், பென்ஸிலும், பெண்ட்லியிலும் , டயோட்டாவிலும் சொகுசாக சென்று வந்தவர்களில் பலர், மண் ஏற்றிச்செல்லும் டிராக்டரின் மீது ஏறி அமர்ந்து தங்கள் வீடுகளில் இருந்தும், பணி செய்யும் நிறுவனங்களிலிருந்தும் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்....

கொட்டித்தீர்த்த கனமழையால் எலக்ட்ரானிக் சிட்டி பொறியாளர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு தங்கள் பலகோடி கொட்டிக் கொடுத்து வாங்கிய வில்லாக்களே தற்போது வில்லனாக மாறி உள்ளது.

குறிப்பாக வெனீஸ் நகரம் போல நீரால் சூழப்பட்டு காணப்படும் ரெயின்போ டிரைவ் லேஅவுட் வில்லாக்கள் முழுமையாக ராஜ கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றை விரைவாக அகற்றாவிட்டால் தாங்கள் இடித்து அகற்றுவோம் என்று 15 க்கும் மேற்பட்ட வில்லா உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கனமழையில் வில்லாக்கள் மூழ்கிய போது அமைதியாக இருந்த அதிகாரிகள், இப்போதே வெளியேற்ற வேண்டும் என தற்போது வலியுறுத்தி வருவதால் வில்லாக்களின் உரிமையாளர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments