மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர வாய்ப்பு

0 3411

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதத்தை மத்திய அரசு ஊழியர்கள் தற்போது அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலை மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், இதன்மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments