ரயில் படியில் பயணம் செய்த போது தவறி தண்டவாளத்தில் விழுந்த ஐ.டி ஊழியர்-5 கி.மீ தேடிச்சென்று மீட்ட தீயணைப்புத்துறையினர்

0 2961

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்தபோது தவறி விழுந்த ஐ.டி ஊழியரை 5 கிலோமீட்டர் தூரம் தேடிச்சென்று தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

கோயம்புத்தூர் நோக்கி சென்ற அந்த ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த ஐ.டி ஊழியரான சிக்கந்தர்பாட்ஷா அதிகாலை 4 மணியளவில், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அதனை கவனித்த சக பயணிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தேடிச்சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்டவாளம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த சிக்கந்தர்பாட்ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments