செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம், உலக நாடுகளின் கவனத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது - முதலமைச்சர்
செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம், உலக நாடுகளின் கவனத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது எனவும், உலக அளவில் விளையாட்டு துறையில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.
முன்னதாக 1130 வீரர், வீராங்கனைகளுக்கு காசோலை மற்றும் விருதுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிகளுக்கான இணையதள பதிவை தொடக்கி வைத்தார்.
Comments