தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொறுப்பேற்பு
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1662971392187250.jpg)
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும்வரை அதற்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துபட்டில் பாரத சாரணர் சாரணிய இயக்கத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், சாரணர் இயக்கத்தினருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்
நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு சட்ட போராட்டம் நடந்து வருகிறது. நீட் தேர்வு விலக்கில் வெற்றி பெறும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து தவறாமல் வழங்கப்படும். 4000 அரசு பள்ளி மாணவர்களுக்கு மேல் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளார்கள். அது எங்களுக்கு போதாது.
Comments