அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு ரூ.1,800 கோடி செலவாகும் - ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு 1,800 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோயில் வளாகத்தில் ராமாயண முக்கிய கதாபாத்திரங்களுக்கும், இந்து மத முக்கிய சீயர்களுக்கும் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
நிபுணர்கள் அளித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு, கோயில் கட்டுமான பணிக்கு 1,800 கோடி ரூபாய் செலவாகும் என்றும், 2023ம் ஆண்டு டிசம்பருக்குள் கட்டுமான பணியை முடித்து, 2024 ஜனவரி மாத சங்க்ராந்தியன்று ராமர் சிலையை கருவறையில் வைக்கலாம் என அறக்கட்டளை செயலாளர் Champat Rai தெரிவித்துள்ளார்.
Comments