61வது முறையாக ரயில்வே யூனியன் தேர்தலில் வெற்றி பெற்று, உ.பி.,யை சேர்ந்த 106 வயது முதியவர் கின்னஸ் சாதனை

0 2319

உத்தரப் பிரதேசத்தில் 106 வயதுடைய முதியவர் 61வது முறையாக ரயில்வே யூனியன் தேர்தலில் வெற்றி பெற்று உலகின் மிகவும் வயதான தொழிற்சங்கத் தலைவராக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளார்.

ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய கோராக்பூரை சேர்ந்த கன்னையா லால் குப்தா என்பவர் கடந்த 1946ஆம் ஆண்டு வடகிழக்கு ரயில்வே மஸ்தூர் யூனியனில் முதல்முறையாக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், ஒவ்வொரு ஆண்டும் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் கடந்த 1981ம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், சக உறுப்பினர்கள் குரலாக ஒலித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments