அரிய வகை முகச்சிதைவு நோய்க்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சிறுமி தான்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

0 3567

முகச்சிதைவு நோய்க்காக, அதி நவீன முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி சிறுமி தான்யா, 21 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு, கடந்த 23ஆம் தேதியன்று தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட நிலையில், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சந்தித்த அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

மேலும், 6 மாதத்திற்கு சிறுமி தான்யாவிற்கு முகச் சீரமைப்புக்கான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments