சென்னை அண்ணா சாலையில், கெத்தாக பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்களை கொத்தாக தூக்கிய போலீசார்

0 1919

சென்னை அண்ணா சாலையில், இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8-ஆம் தேதி இரவு, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலிருந்து ஜெமினி மேம்பாலம் வரை இளைஞர்கள் சிலர், ஆபத்தான முறையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக இணையத்தில் பரவிய வீடியோவை கொண்டு போலீசார் இருவரை ஏற்கனவே கைது செய்த நிலையில், அவ்வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ஹைதராபாத்தை சேர்ந்த பினோஜை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments