அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 21ஆம் ஆண்டு நினைவு தினம்.. பொதுமக்கள் அஞ்சலி!

0 2975

உலகையே உலுக்கிய செப்டம்பர் 9/11 பயங்கரவாத தாக்குதலின் 21ஆவது ஆண்டு நினைவு தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா ஒருபோதும் ஓய்வதில்லை என்றும், இந்த தாக்குதலை மறக்க மாட்டோம் என்றும் கூறினார்.

நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ஆம் ஆண்டு செப்,.11-ந்தேதி அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்து, ராணுவ தலைமையகமான பெண்டகன், பென்சில்வேனியாவிலும் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கோர சம்பவத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பென்டகனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடனும், பென்சில்வேனியாவில் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments