கியான்வாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வர வாய்ப்பு.. 144 தடை உத்தரவு அமல்.. போலீசார் குவிப்பு!

0 2193

வாரணாசியின் கியான் வாபி மசூதி தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மசூதிக்குள் இந்து வழிபாட்டு அடையாளங்கள் இருந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்படி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தியது. சர்ச்சைக்குரிய இவ்வழக்கின் தீர்ப்பையடுத்து 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்து-முஸ்லீம் மக்கள் கூட்டாக வசிக்கும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினர் கொடி அணிவகுப்புகள் நடத்தி இந்து-முஸ்லீம் இருதரப்பினரும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments