துபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி கட்டப்பட உள்ளதாக தகவல்

0 15591
துபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி கட்டப்பட உள்ளதாக தகவல்

துபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலவின் மேற்பரப்பு போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட உள்ள அந்த சொகுசு விடுதியின் கட்டுமானப் பணிகள் 48 மாதங்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இந்திய மதிப்பில் 39 ஆயிரத்து 828 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட உள்ள அந்த சொகுசு விடுதியின் மொத்த உயரம், 735 அடியாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

நலவாழ்வு மையம், இரவு விடுதிகள், வில்லா குடியிருப்புகள் உள்ளிட்டவையும் அதில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments