காங்கேயம் அருகே தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்த பெண் தொடர்பாக போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்த பெண் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரியாக்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர், தனது கணவன் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். வஞ்சிபாளையம் பகுதியில் பனியன் கம்பெனியில் வேலைக்கு செல்லும் ரேவதி, பணி முடிந்து காட்டுப்பாதை வழியாக திரும்புவது வழக்கம் என கூறப்படுகிறது.
நேற்று காலை வேலைக்கு சென்று வெகு நேரமாகியும் ரேவதி வீட்டிற்கு திரும்பாத நிலையில், அவரை தேடிய அவரது உறவினர்கள் பி.ஏ.பி கிளை வாய்க்கால் கரையோர முட்புதர் அருகே சடலமாக கண்டுபிடித்தனர்.
தலையில் படுகாயத்துடன் கிடந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments