அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு..? மருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம்..!
தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், மருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு 4 முறை சுகாதாரத்துறை மொத்தமாக மருந்து கொள்முதல் செய்யும் நிலையில், வழக்கமாக ஜனவரி, பிப்ரவரியில் நிலவும் தட்டுப்பாடு, ஜூன் முதலே நிலவுவதாக சொல்லப்படுகிறது.
வைட்டமின், பி-காம்பிளக்ஸ், டெல்மிசெர்டையன் போன்ற மருந்துகளுக்கும் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.
Comments