டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு பேருந்து வாங்குவதில் முறைகேடு.. சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதி

0 3196
டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு பேருந்து வாங்குவதில் முறைகேடு.. சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதி

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயங்கும் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதில் போடப்பட்ட ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.

CNG தாழ்தள பேருந்துகளை வாங்குவது தொடர்பான குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்து அமைச்சரை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தலைமை செயலர் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, அவர் அனுப்பிய அறிக்கையில், ஒப்பந்தத்தில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும்,கொள்முதல் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்து விசாரணை நடத்த பரிந்துரை செய்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments