பாதாம் பருப்பை திருடியதாகக்கூறி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவு!

0 2949

மத்திய பிரதேசத்தில் பாதாம் பருப்பை திருடியதாகக்கூறி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாகர் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் கோயிலில் பூஜைக்கு வைத்திருந்த பாதாம் பருப்பை 11வயது சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பூசாரி ராகேஷ் ஜெயின் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் கோயில் பூசாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments