இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த இளைஞர்கள் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - 2 பேர் பலி

0 3208

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர்கள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.

சுந்தரவேலபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ஆசிக், மாரிச்செல்வம் ஆகிய 3 பேர் இருசக்கர வாகனத்தில் முத்தையாபுரத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சத்யாநகர் மேம்பாலத்தில் சென்றபோது,  நிலைதடுமாறிய வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதி சாய்ந்தது.

இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேர் மீதும் அவ்வழியாக நாசரேத் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. விக்னேஷ், ஆசிக் ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மாரிச்செல்வம்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments