பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 56 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்.!

0 2126

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 56 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பிராங்கிளின் ரூபன் ஜெயராஜ் மற்றும் அவரது மனைவி விக்டோரியா ராணி மாட்டுத்தாவணி, லேக் ஏரியா பகுதியில் வசித்து வருகின்றனர்.

நேற்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு கல்லூரிக்கு சென்று, மாலை வீடு திரும்பியபோது பூட்டிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments