இலங்கையில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியா கடனுதவி..!
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு மத்திய அரசு உதவ முன்வந்துள்ளது.
பள்ளிப் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான கடனுதவியை அளிப்பதாக இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக இலங்கை கல்வித்துறை அமைச்சர் சுசில் பிரேமஜனதா கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நோட்டு பாடப்புத்தகங்களை அச்சிடத் தேவையான மை, காகிதம் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவின் கடனுதவி மூலம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
வரும் ஜனவரி மாதம் அச்சுப்பணிகள் முடிந்து, மார்ச் முதல் தொடங்கும் கல்வியாண்டின் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Comments