மணப்பெண்ணிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்.. உசிலம்பட்டியில் சுவாரஸ்யம்..!

0 3336

உசிலம்பட்டியில் தங்கள் நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

உசிலம்பட்டியைச் சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும், தேனியைச் சேர்ந்த பூஜாவிற்கும் நடந்த திருமணத்தின் போது, ஹரிபிரசாத்தின் நண்பர்கள் ஒன்றிணைந்து 20 ரூபாய் பத்திரத்தை மணப்பெண்ணிடம் நீட்டினர்.

அதில் ”எனது கணவரை சனி, ஞாயிற்று கிழமைகளில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது மணமேடையிலேயே மணப்பெண் அந்தப்பத்திரத்தில் கையொப்பமிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments