கையை விட்டு காதல் போனால் கையில் ரேகையில்ல.. கபிலன் மகளின் விபரீத முடிவு..!
திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, மின்விறிசியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபாலி, சார்பட்டா பரம்பரை, சைக்கோ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களை எழுதியுள்ளவர் பாடலாசிரியர் கபிலன், சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் , திருப்பூர் குமரன் தெருவில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகளான 28 வயதான தூரிகை, MBA முடித்துவிட்டு பெண்கள் தொடர்பான ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வந்தார். பியூட்டீஷியன், பேஷன் டிசைனிங் உள்ளிட்ட துறைகளில் இருந்த ஆர்வம் மிகுதியால் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி வந்தார்
சம்பவத்தன்று மகள் தூரிகையை வெகுநேரமாகியும் காணாததால், வீட்டிலுள்ள அறைகளில் தாயார் தேடியுள்ளார். அப்போது வீட்டின் 3 ஆம் தளத்தில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் தூரிகை சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது
தூரிகையின் தற்கொலைக்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில், அவர் பிரபல திரைப்பட இயக்குநர் குழுவில் இருக்கும் நபர் ஒருவரை காதலித்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடலாசிரியர் கபிலனும், அவருடைய மனைவியும், இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாள்களாக மனவிரக்தியில் இருந்த தூரிகை தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
Comments