நடைப்பயிற்சி மேற்கொண்ட போது தகராறு-இளைஞரை துப்பாக்கி காட்டி மிரட்டி தாக்கியதாக சிறப்பு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மீது புகார்
செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர், இளைஞரை துப்பாக்கி காட்டி மிரட்டி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவலர் குடியிருப்பு வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் மகன் சையத் இமான் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, ஒரு சிறுமி சுருள் கம்பியை சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமி அருகே சில சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், அதனை கண்ட சையத் இமான், சிறுமியிடம் கம்பி யார் மீதாவது பட்டு விடும், உனது பெற்றோர் எங்கே என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அங்கிருந்த சிறுமியின் தந்தையான சிறப்பு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளருக்கும் இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை காட்டி சையத் இமானை மிரட்டியதோடு அங்கிருந்தவர்களுடன் இணைந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சையத் இமான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Comments