விசாரணைக்காக அழைக்கப்படுவர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
விசாரணைக்காக அழைக்கப்படுவர்களை காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது என்றும், விசாரணையின் போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக எழுத்துபூர்வமாக குறிப்பெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றம் தலையிடும் என கூறிய அவர், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், அவ்வாறு அனுப்பும் போது ஆஜராக வேண்டிய நாள், நேரம், இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Comments