ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தில் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை மாற்றம்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்க உள்ளதால் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட உள்ளன.
கடந்த 1952ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்ற நாளில் இருந்து பிரிட்டனின் தேசிய கீதத்தில் ‘‘காட் சேவ் தி குயின்’’ என்ற வரிகள் பாடப்பட்ட நிலையில், தற்போது சார்லஸ் மன்னராக இருப்பதால் ‘‘காட் சேவ் தி கிங்’’ என்று தேசிய கீதம் மாற்றப்படுகிறது.
இதேபோல் இங்கிலாந்தின் நாணயம், கரன்சி, பாஸ்போர்ட், அஞ்சல் தலை உள்ளிட்டவற்றிலும் மன்னர் சார்லஸை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
Comments