இளநிலை பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்பில், பொது பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது.
கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் நான்கு சுற்றுக்களாக கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், முதல் சுற்று இன்று முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதில் 184.5 மதிப்பெண்ணில் இருந்து 200 மதிப்பெண்கள் வரை கட் ஆப் பெற்ற மாணவர்கள், கலந்து கொண்டு பொதுப் பிரிவினர், அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீடு பெறுபவர்கள், தொழிற்பிரிவினர், தொழிற் பிரிவினரில் 7.5% ஒதுக்கீடு பெறுபவர்கள் என்ற பிரிவுகளின் கீழ் தங்களது கல்லூரியை தேர்வு செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், வரும் 22-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேராவிட்டால் அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும்.
Comments