மின்சார ஸ்கூட்டருக்கு மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லை என அபராதம் விதித்த போலீசார்
மின்சார ஸ்கூட்டர்-க்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை எனக் கூறி போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் கேரளாவில் அரங்கேறிள்ளது.
பெட்ரோல், டீசல் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் கார் மற்றும் பைக்குகள் மாசை ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் அருகே மின்சார ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபருக்கு மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லை எனக்கூறி போலீசார், வாகன உரிமையாளருக்கு 250 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், ஸ்கூட்டரை ஓட்டிவந்த நபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும், அதற்கான அபராத ரசீதுக்கு பதில் தவறுதலாக மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லையென ரசீது வழங்கப்பட்டுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
Comments