குடற்புழு மாத்திரைகள் சாப்பிட்ட அரசு பள்ளி மாணவி மயக்கமடைந்த நிலையில் சக மாணவிகள் தங்களுக்கும் மயக்கம் வருவது போல் உணர்ந்ததாக தகவல்
சேலம் மாவட்டம் ஆத்தூரில், குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டு மயக்கமடைந்த அரசு பள்ளி மாணவியை பார்த்து பதற்றமடைந்த சக மாணவிகள் தங்களுக்கும் மயக்கம் வருவது போல் உணர்ந்ததாக சேலம் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
குடல் புழுக்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2,500 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அதை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் வருவதுபோல் உணர்ந்ததால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் சேலம் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் நலம் விசாரித்தார்.
Comments