கல்வி வணிகமயமானதுடன், தகுதி இல்லாதவர்களின் கைகளில் விழுந்துவிட்டது - உயர்நீதிமன்றம் கண்டனம்
ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவிக்கு பி.ஆர்க். படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட வழக்கில், தகுதி இல்லாதவர்கள் எடுக்கும் முடிவுகளால் மாணவர்களின் வாழ்க்கை வீணாவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்த வழக்கில், பொறுப்பற்ற கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளால், இளைஞர்களின் வாழ்வு எப்படி பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதை இவ்வழக்கு காட்டுவதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், பி.ஆர்க் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments