அரசு பேருந்து மீது கார் மோதியதில், கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

0 2833
அரசு பேருந்து மீது கார் மோதியதில், கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

நீண்ட தூரம் அதிக பயணிகளுடன் சென்றதாலும், டயர்கள் தேய்ந்திருந்த காரணத்தினாலும், காரின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில், கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் நெடுங்காடு கீழாநூர் பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பவர் தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்கள் 10 பேருடன் பழனிக்கு காரில் வந்துக்கொண்டிருந்தார். பண்ணைப்பட்டி அருகே வந்தபோது அவர்களது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், தடுப்பு சுவர் மீது ஏறி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் அதே இடத்தில் பலியானார்கள். அபிஜித்தின் 2 வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

ஸ்பீட் பிரேக்கரை கண்டதும் காரை ஓட்டியவர் திடீரென பிரேக் போட்டதாகவும், ஆனால், ஏற்கனவே தேய்ந்திருந்ததால் முன்பக்க டயர் வெடித்து கார் நிலைத்தடுமாறி எதிரே வந்த பேருந்து மீது மோதியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments