அமெரிக்காவில் சிம்-டிரே இல்லாமல் 'ஐ-போன் 14' விற்கப்படுவதால் அதனை இந்தியாவில் பயன்படுத்துவதில் சிக்கல்

0 3611
அமெரிக்காவில் சிம்-டிரே இல்லாமல் 'ஐ-போன் 14' விற்கப்படுவதால் அதனை இந்தியாவில் பயன்படுத்துவதில் சிக்கல்

அமெரிக்காவில், ஆப்பிள் ஐபோன் 14, இ-சிம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சிம்-டிரே இல்லாமல் விற்கப்படுவதால் அங்கிருந்து அதனை வாங்கி வந்து இந்தியாவில் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை விட அமெரிக்காவில் குறைவான விலைக்கு ஐ-போன்கள் கிடைப்பதால் பலர் அங்குள்ள உறவினர்கள் மூலம் அவற்றை வாங்கி வந்து பயன்படுத்தி வந்தனர்.

அமெரிக்காவில் விற்கப்படும் ஐ-போன்களில் இ-சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அங்கிருந்து அவற்றை வாங்கி வந்து தங்கள் சிம் கார்டை இ-சிம் ஆக மாற்றி பயன்படுத்த வேண்டும். ஒருவேளை, அவசரத்திற்கு Android போனை பயன்படுத்தவேண்டுமானால் ஷோரூம் சென்று புதிய சிம் கார்ட் வாங்கவேண்டிவரும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments