ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு திரும்பப்பெற வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு திரும்பப்பெற வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை எழுந்துள்ளது.
14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோஹினூர் வைரம் கடைசியாக 1813-ம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் படையெடுப்பின்போது இந்த வைரம் இந்தியாவில் இருந்து திருடப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தில் உள்ள 21 கிராம் எடை கொண்ட 105 காரட் கோஹினூர் வைரத்தை திரும்ப கேட்டு இந்திய அரசு பலவித முயற்சிகள் எடுத்தும் பிரிட்டன் அரசு வழங்க மறுத்து வருகிறது.
Comments