நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வு பயிற்சியும், மனப்பயிற்சியும் அளிக்க வேண்டும் - இ.பி.எஸ்
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்களின் எதிகால நலன் கருதி, தேர்வுக்கான பயிற்சியையும், மனப்பயிற்சியையும் தமிழக அரசு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசானி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த அறிக்கையில், நீட் தேர்வை ஒழிப்பதாக பொய் வாக்குறுதி அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், மாணவர்களின் தற்கொலைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்கள், முறையாக செயல்படுத்தப்படாததால், தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலைகளும் அதிகரிப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Comments