தனியார் மருத்துவக் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக்கழக கட்டண வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50% இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்குகள் தொடர்ந்தது.
வழக்கு விசாரணையில் , தனியார் மருத்துவக் கல்லூரிகள் லாபநோக்குடன் செயல்படக் கூடாது என்பதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மருத்துவ ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து, 50% இடங்களுக்கு அரசுக் கல்லூரி கட்டணம் வசூலிப்பதால், எஞ்சிய இடங்களில் சேரும் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுவதாகவும், கட்டணம் குறித்த உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments