அக்கா உயிரிழந்த செய்தியை கேட்டதும், மயக்கமடைந்து உயிரிழந்த தங்கை.. உறவினர்கள் சோகம்!

0 3104

சென்னை கொருக்குபேட்டையில் அக்காள் இறந்த தகவல் கேட்டதும் தங்கை மயங்கி விழுந்து இறந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொருக்குப்பேட்டை காமராஜர் நகரில் வசித்து வந்த 74 வயது ராதாம்மாள் என்பவர் உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவரது மறைவு செய்தியை கேட்டதும் அவரது தங்கையான 65 வயது கனக்கம்மா சாலையிலேயே மயக்கமடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கனக்கம்மா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாழும் போது இணைப்பிரியாமல் வாழ்ந்த சகோதரிகள் இருவரும் சாவிலும் ஒன்று சேர்ந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments