மகனுடன் சேர்ந்து ரபேல் போர் விமானத்தை இயக்கிய விமானப்படை தலைமைத் தளபதி
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு அதிநவீன 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கியுள்ள நிலையில், விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரியின் மகனும் விமானப்படை விமானியுமான மிஹிர் வி சவுத்ரி மேற்குவங்க மாநிலம் ஹசிமரா விமானப்படை தளத்தில் இருந்து தனது தந்தையுடன் கூட்டாக ரபேல் விமானத்தை இயக்கியுள்ளார்.
இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விமானப்படையின் வழக்கமான நிகழ்வுதான் இது என்றும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இளம்தலைவர்களை தயார்படுத்த இதுபோன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#WATCH | Indian Air Force chief Air Chief Marshal VR Chaudhari taking off in a Light Combat Aircraft Tejas fighter jet in Bengaluru, Karnataka. pic.twitter.com/TntYGtq6cr
Comments