போக்சோ உட்பட சிறார்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட டிஜிபி உத்தரவு!
போக்சோ உட்பட சிறார்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும் என டிஜிபி அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் போக்சோ வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன் மாவட்ட குழந்தை நல அலுவலருக்கும் அதன் நகலை வழங்க வேண்டும் எனவும், தேவை என கருதினால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறார்களை காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அறிவுறித்தியுள்ளார்.
அதேபோல வழக்கு நடைபெறும் போதே பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் நீதிமன்றம் மூலம் வழங்க உதவ வேண்டும் எனவும் டிஜிபி சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.
Comments