தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 109 கடைகளுக்கு சீல்!
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 109 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு 100 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலை, போதைப் பொருள் விற்ற கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
கடை உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளிக்காததால் ஒரே நாளில் 109 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
Comments