தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது - முதலமைச்சர்!
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டிகோவிலில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், கடந்த காலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய சட்டத் திருத்தம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
Comments